ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மகம் நட்சத்திர வழிபாடு
ADDED :1 days ago
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உள்ள எம்பிரான் மாற நாயனார் சந்நிதியில் மார்கழி மாத மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால்,பன்னீர்,சந்தனம், இளநீர், திரவியம், நெய்,குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் இளையான்குடி, மானாமதுரை, பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை எம்பிரான் மாற நாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.