உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்

நவநீத பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்

வாடிப்பட்டி; வாடிப்பட்டி நவநீத பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி, மார்கழி 27ல் ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து, ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்ஸவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சத்யபாமா, ருக்மணி சமேத நவநீத பெருமகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அம்மன், சுவாமி சர்வ அலங்கரித்தில் அருள் பாலித்தனர். பக்தர்கள் திருவம்பாவை, திருப்பாவை பாடினர்.சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர் நாராயணன் செய்தார்.பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !