உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ராதா மாதவ கல்யாண உற்ஸவம்

பழநியில் ராதா மாதவ கல்யாண உற்ஸவம்

பழநி; பழநி அ.கலையம்புத்தூர், அக்ரஹாரம் பகுதியில் சமாஜம் சார்பில் ராதாமாதவ கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.


பழநி,அ.கலையம்புத்தூர், அக்ரஹாரம் பகுதியில் ராதாமாதவ கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. முன்னதாக மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் அக்ரஹார வீதிகளில் பஜனை நடைபெற்றது. நேற்று அதிகாலை நீதிபதினையில் கூடாரவல்லி நிகழ்வாக ஸ்ரீ ஆண்டாள் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மேலும் ராதா மாதவ கல்யாண உற்சவத்திற்கு உள்ளூர்,வெளியூர் வெளி மாநில 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் திவ்யநாம பஜனையும் யாக பூஜையும் நடைபெற்றது. சிறப்பு கச்சேரி அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !