சிம்மம் : தை ராசி பலன்
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு, பிரகாசமான மாதமாக தை இருக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல உங்கள் நிலை மாறும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். புதிய வழிகள் தெரியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது நெருக்கடிகளை உண்டாக்கும். ஒவ்வொன்றிலும் தடை, தாமதம், அலைக்கழிப்பு என்று போராட்டமான நிலை உண்டாக்கும். இவற்றையும் மீறி சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி செவ்வாய் பெரிய முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரிகளுக்கு விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துறை ரீதியான வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் கூட்டணி அமைத்து நெருக்கடி உண்டாக்கினாலும் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெற்று லாபம் காண்பீர்கள். லாப ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள குரு வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வெளிநாடுகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன.23,24
அதிர்ஷ்ட நாள்: ஜன.16,19,25,28, பிப்.1,7,10
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலைச் சாத்த நன்மை உண்டாகும்.
பூரம்
எந்நிலையிலும் சோர்வடையாமல் முன்னேற்றத்தில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். திருமண வயதினருக்கு இந்த நேரத்தில் எந்தவகை முயற்சி மேற்கொண்டாலும் அது நிறைவேறாமல் போகும். மாதம் முழுவதும் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்ப்பு, பகை, நோய், நொடி, வம்பு, வழக்குகள் இடம் தெரியாமல் போகும். உங்கள் நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இடம் விற்பது, வாங்குவது போன்றவற்றில் ஏற்பட்ட தடை விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வர். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சார நிலை எதிர்மறையாக இருப்பதால் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். புதிய நண்பர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அவர்களால் பண இழப்பு, அல்லது அவமானத்தை சந்திக்க நேரலாம். உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்பவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள் ஜன.29 வரை ஆதாயம் காண முடியும். மாணவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகி படிப்பில் கவனம் உண்டாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன.24, 25
அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 19, 28. பிப்.1, 6, 10
பரிகாரம்
அங்காள பரமேஸ்வரியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மை வகிக்கும் உங்களுக்கு அதிர்ஷ்டம் மாதமாக தை இருக்கும். சனி, ராகு, கேது நெருக்கடியை ஏற்படுத்தினாலும், ராசிநாதன் சூரியன் சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்ந்திருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது தேடி வரும். ஆறாம் இடத்தில் உங்கள் பாக்கியாதிபதி செவ்வாயும் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்திருப்பதால் தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் இருக்கும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஜன.29 வரை உங்கள் தன, குடும்பாதிபதி புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். மொத்தத்தில் இந்த மாதம் சுபிட்சமான மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன.25
அதிர்ஷ்ட நாள்: ஜன.19, 28. பிப். 1, 10
பரிகாரம்
அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை அதிகரிக்கும்.