கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாளுக்கு கண்ணாடி அறை உற்சவம்
ADDED :116 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீக வல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கண்ணாடி அறையில் தாயார் சகிதம் பள்ளி கொள்ளும் உற்சவம் நடந்தது. பட்டாடைகள் உடுத்தி, நகைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தாயார், உபய நாச்சியார் கண்ணாடி அறைக்குள் எழுந்தருளினர். நேற்று அதிகாலை சுப்ர பாத சேவை, பசு பூஜை, விஸ்வரூப தரிசனம் நடத்தி, பள்ளி அறை திறக்கப்பட்டது. விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜைகள் செய்து, மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாடுகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். ஏற்பாடுகளை செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் செய்திருந்தனர்.