உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி

செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது.

அதனையொட்டி, நேற்று ஒரே நாளில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 7 வாகனங்களில் ரங்கநாதர் வீதியுலா நடந்தது. காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, 8:00 மணிக்கு சேஷா வாகனம், 10:00 மணிக்கு கருட வாகனம், 12:00 மணிக்கு குதிரை வாகனம், 1:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 2:00 மணிக்கு அனுமந்த வாகனம், 4:00 மணிக்கு யானை வாகனம், 6:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் ரங்கநாதர் மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !