வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி
ADDED :1 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதசப்தமி மகோற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, காலை 9:30 மணிக்கு அனுமந்த வாகனம், காலை 10:30 மணிக்கு சேஷ வாகனம், பகல் 12:30 மணிக்கு கருட வாகன அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு இந்திர வாகனம், மாலை 5:00 மணிக்கு கற்பக விருட்சம் வாகனம், இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.