திருப்பதிக்கு நடை பயணம்
ADDED :1 days ago
செஞ்சி: செஞ்சி, திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா குழுவினர் 26வது ஆண்டாக செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடை பயணம் சென்றனர்.
கடந்த 23ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறுகடம்பூர் ருக்மணி சமேத கிருஷ்ணகோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்பதி சென்ற குழுவினருக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து வழி அனுப்பி வைத்தனர்.
சபைத் தலைவர் பூங்காவனம் தலைமையில் 170 பக்தர்கள் 6 நாள் நடை பயணம் செய்து 28ம் தேதி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.