உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச கொடியேற்றம்

குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச கொடியேற்றம்

அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது.


பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பலிபீட பூஜை மற்றும் கலச பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 6:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேதரராக, கல்யாண சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வருகிற 30ம் தேதி வரை, தினமும் காலை 11:00 மணிக்கு சுவாமி கிரிவலம் நடக்கிறது. வரும் 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அம்மனுக்கு சீர் கொண்டு வருதலும், அம்மன் அழைப்பும் நடக்கிறது. வரும் பிப். 1ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு காவடி செலுத்தும் வைபவமும், அன்னதானமும், பஜனையும் நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு பரிவேட்டை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !