அலகு மலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :9 minutes ago
பொங்கலூர்; பொங்கலூர் அலகுமலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் வரும், 30 ம் தேதி வரை சுவாமி திருவீதி கட்டளைதாரர்கள் பங்கேற்புடன் நடக்கிறது. வரும், 31 ல் திருக்கல்யாண உற்சவம், பிப்ரவரி, 1 ல் காலை, 6:00 மணிக்கு சுவாமி தேரேற்றம் மதியம், 11:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. பிப்.,2 ல் பரிவேட்டை, பிப்.,3 ல் சுவாமி திருவீதி உலா, பிப்.,4 தரிசனம், மஞ்சள் நீராடல், அன்னதானம் நடக்கிறது.