திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 120 திருமணங்கள்
ADDED :1 days ago
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில் 120 திருமணங்களால் நடந்ததால் கூட்டம் அலைமோதியது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், நடுநாட்டு திருப்பதி என்றழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் திருமணம் செய்தால் குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் இந்த கோவிலில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தை வளர்பிறை முகூர்த்தம் என்பதால், 120 திருமணங்கள் நடந்தன. இதனால் திருவந்திபுரம் கோவிலில் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.