அவிநாசி – ஓதிமலை பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :2 hours ago
அவிநாசி: புளியம்பட்டி, இரும்பறை கிராமத்தில், 1860 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்கு, அவிநாசி, செம்பாகவுண்டன்பாளையம் ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடி குழு சார்பில் 11வது ஆண்டாக காவடி பாதயாத்திரை செல்கின்றனர்.
இதற்காக, சேவூர் ரோடு, சூளையில் உள்ள வில்வ விநாயகர் கோவிலில் இருந்து ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடி குழு சார்பில் 11ம் ஆண்டாக பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக வில்வ விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்து தைப்பூச தினமான இன்று ஓதிமலை முருகனை தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து, ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடி குழு சார்பில் அடிவார பகுதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.