உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவிலில் 11ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம்

புதுச்சேரி கோவிலில் 11ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம்

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடம் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணம் வரும் 11ம் தேதி நடக்கிறது. முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடம் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் கூடாரவல்லி உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது. 10ம் தேதி மாலை 6 மணிக்கு பின்னை மர வாகனத்தில் பஜனையுடன் வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி காலை 7 மணிக்கு, கண்ணன், ஆண்டாள் நாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு கலசத் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு, சந்துவெளி மாரியம்மன் கோவிலிலிருந்து பள்ளத் தெரு வழியாக, பெண் அழைப்பு நடக்கிறது. இதில் பெண்கள் சீர் தட்டு வரிசையுடன் கலந்து கொள்ளலாம். பகல், 12.05 மணிக்கு, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, திருமணக் கோலத்தில் முத்துப்பல்லக்கில் சுவாமி, தாயார் கோதை நாச்சியாருடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !