உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செஞ்சி: கன்னலம் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செஞ்சி அடுத்த கன்னலம் பச்சையம்மன் முனீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து மகா ஜீர்ணோத்தாரன கும்பாபிஷேக விழா நடந்தது.


இதை முன்னிட்டு கடந்த ஜன., 30 ஆம் தேதி காலை 9:00 மணிக்கு சாமி சிலைகள் ஊர்வலமும், தொடர்ந்து, 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு தேவதாதா, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், பிரவேச பலி, வாஸ்து சாந்தியும், இரவு 7:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஜெபம், நவகிரக ஹோமமும் நடந்தது.


கடந்த, 1ம் தேதி காலை 7:00 மணிக்கு துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஓமம், பச்சையம்மன், முனீஸ்வரன் மூல மந்திர ஹோமமும், 8:30 மணிக்கு மகா பூர்ணஹுதியும், கடம் புறப்பாடும் 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.


இரவு நாதஸ்வர கச்சேரியுடன் பச்சையம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !