சக்தி கருமாரியம்மன் கோயில் ஆண்டு விழா
ADDED :253 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி கருமாரியம்மன் கோயில், 8ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவையொட்டி காலை, 6:00 மணி முதல் கணபதி ஹோமம், தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி சித்தி விநாயகர், சக்தி கருமாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் மகளிர் அமைப்பினர் செய்து இருந்தனர்.