உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா

திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா

சோழவந்தான்: திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி, அம்மன்கோயிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அன்னதானம் நடந்தது. மதியம் 3:30 மணிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை, விளக்கு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமியும் அம்மனும் மின் அலங்காரத்தில் ரத வீதிகளில் வலம் வந்தனர். நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன், விழா கமிட்டியினர், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !