உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளங்காமுடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

இளங்காமுடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர்; கம்பூரில் இளங்காமுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.


மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நேற்று குதிரை பொட்டலில் இருந்து புரவிகள் மற்றும் பதுமைகளை முத்துப்பிடாரியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு மாவிளக்கு ஏற்றியும், குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (பிப். 7) கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள இளங்காமுடி அய்யனார் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படும் . வழியில் ஈட்டிக்கார சாமி கூறி செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாம் நாள் கருப்பு கோயில் முன் கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபடுவர். இவ்விழாவில் கம்பூர், தேனங்குடி பட்டி, அய்வத்தாம் பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !