திருவண்ணாமலையில் மகான் சேஷாத்திரி சுவாமிகளின் 156 வது ஜெயந்தி விழா
ADDED :5 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில், சேஷாத்திரி மகானின் 156 வது ஜெயந்தி விழாவில், திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் 156வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சேஷாத்திரி சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.