சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம்
ADDED :18 hours ago
அவிநாசி ; சின்னேரிபாளையம் கிராமம், அபிராமி கார்டனில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த கூட ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி வட்டம்,சின்னேரிபாளையம் கிராமம் அபிராமி கார்டனில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் 8ம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகை மற்றும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவில் விழா குழுவினர் சார்பில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.