உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 300வது சுவாதி ஹோமம்

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 300வது சுவாதி ஹோமம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 9:00 மணிக்கு மூலவர் நரசிம்மருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு 10:00 மணிக்கு யாகசாலையில் சுதர்சன தன்வந்திரி ேஹாமம், சுக்த ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் ேஹாமம் நடத்தினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !