உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கராபுரம் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சக்கராபுரம் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி; செஞ்சி, சக்கராபுரம் செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


செஞ்சி, சக்கராபுரம் செல்வ விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், நவகிரகங்கள் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 6 ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தியும், முதற்கால யாகசாலை பூஜையும் நடந்தது. 7ம் தேதி காலை 7 மணிக்கு நவக்கிரக ஹோமமும், இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, மூல மந்திர ஹோமம், மூன்றாம் கால யாகசாலை மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் 8.00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகா அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !