உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா

கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா

கோவை: ராம்நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 54ம் ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று ன்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் மூலவர் தங்கக் காப்பு கவசத்தில் வள்ளி தேவசேனா சமேதராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 1ம் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகியன நடைபெறும். மாலை 5 மணி அளவில் உற்சவர் ராம் நகர் பகுதிகளில் திருவீதி உலா வருவார். தொடர்ந்து வியாழக்கிழமை மறு பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !