உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடந்தது. இக்கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக 16ம் தேதி பந்தல் கால் நட்டு தேரடி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி துவங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்து வந்தது. 30ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய விழாவான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடந்தது. அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு பொய்கை கரை விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். 8:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அன்னியூர்சிவா எம்.எல்.ஏ., மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !