நாகை அமர நந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
நாகை: நாகையில் புகழ்பெற்ற அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 21-ந்தேதி விக்னேஸ்வர பூஜையும், 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சூரிய பிரபை, சந்திரபிரபை, யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம் உள்ளிட்டவைகளில் சாமி புறப்பாடாகி வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காலை 8.50 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக விநாயகர், முருகன், சாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளி சென்றனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருரா, தியாகேசா என கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.