உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் படிப்பாதையில் கற்சிலை வேல் பிரதிஷ்டை

பழநி முருகன் கோயில் படிப்பாதையில் கற்சிலை வேல் பிரதிஷ்டை

பழநி; பழநியில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கற்சிலை வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


பழநியில் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கற்சிலை வேல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 7 டன் எடையில் 15 அடி உயர வேல் கருங்கல்லில், ரூ. 14.5 லட்சம் மதிப்பீட்டில் செதுக்கப்பட்டது. ஜன.,29, நிறைவடைந்த வேல் சிலை படிப்பாதை துவங்கும் பகுதியில் மங்கம்மாள் மண்டபத்திற்கு அடுத்து உள்ள மயில் சிலைக்கு முன்புறம் அமைக்கப்பட்டது. நான்கு அடி உயர பீடம் அமைக்கப்பட்டு முறைப்படி பிரதிஷ்டை செய்ய பிப்.,7,ல் மாலை முதற்கால வேள்வி துவங்கியது. பிப்.,8.,ல் காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கியது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க காலை 8:20 மணிக்கு பழநி முருகன் கோயில் அமர்ந்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி நடத்தினர். நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர்கள், கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !