பழநி கோயிலுக்கு மாட்டு வண்டியில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
ADDED :1 hours ago
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி பக்தர்கள் சென்றனர்.
பழநி கோயிலில் பிப்.,4ல் தைப்பூசத் திருவிழா வை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகின்றனர். நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் வருகை புரிகின்றனர். இவர்களுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார் ஆகியவற்றிலும் வருகை புரிந்தனர். இந்த ஆண்டு 35 மாட்டு வண்டிகளில் தீவனங்களுடன் வந்தனர். காவடிகள் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்து தரிசனம் செய்த பின் இன்று மாட்டு வண்டிகளில் செல்ல உள்ளனர்.