உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்ப விருக்‌ஷ வாகனத்தில் அருள்பாலித்த சென்னை பத்மாவதி தாயார்

கல்ப விருக்‌ஷ வாகனத்தில் அருள்பாலித்த சென்னை பத்மாவதி தாயார்

சென்னை: தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த, பிரம்மோத்சவத்தில் கல்ப விருக்‌ஷ வாகனத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தி.நகரில் பத்மாவதி தயார் கோவில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோத்சவம் விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு பிரம்மோத்சவம் கடந்த,7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று காலை கல்ப விருக்‌ஷத்தில் இரவு, ஹனுமந்த வாகனத்திலும் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இதனை முன்னிட்டு, நேற்று காலை ஸ்நப திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும், இரவு ஆன்மிக இசை நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை கருடசேவை உத்சவம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !