உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரி முருகனை தரிசிக்க அலைமோதிய முருக பக்தர்கள்

சிறுவாபுரி முருகனை தரிசிக்க அலைமோதிய முருக பக்தர்கள்

கும்மிடிப்பூண்டி: கடைசி தை செவ்வாய்க்கிழமை என்பதால், சிறுவாபுரி முருகனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். நேற்று தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால், வழக்கத்தைவிட சிறுவாபுரியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அலைபோல் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் ஐந்து மணி நேரம் காத்திருந்து, முத்து அங்கி அலங்காரத்தில் காட்சியளித்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்தனர். ஆரணி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !