உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் ஆண்டு பழமையான ஜோதிர்லிங்கத்துக்கு திரவிய அபிஷேகம்

ஆயிரம் ஆண்டு பழமையான ஜோதிர்லிங்கத்துக்கு திரவிய அபிஷேகம்

திருப்பூர்: திருப்பூர், பங்களா ஸ்டாப் அருகிலுள்ள வாழும் கலை பயிற்சி மையத்தில் சோமநாத் ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் ருத்ர பூஜை நடந்தது.


சுவாமி சர்வேஷ்வர்ஜி முன்னிலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமநாத் ஜோதிர்லிங்கத்திற்கு பால், தயிர், தேன், திருமஞ்சனம், பன்னீர் உட்பட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின் அலங்காரத்துடன் கோளறு பதிகம் பாடப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் ஒவ்வொருவராக முன்வந்து சோமநாத் ஜோதிர்லிங்கத்தை வழிபட்டனர். பல நுாற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு, தற்போது வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர்ஜியால் வழிபாடு நடத்தப்படும் ஜோதிர்லிங்கம், இந்தியா முழுதும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறது. ‘‘ருத்ர பூஜையில் பங்கேற்பதால் பயம் நீங்கி, மன அமைதி கிடைப்பதோடு எதிர்மறை ஆற்றல் என்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது,’’ என சுவாமி சர்வேஷ்வர்ஜி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !