கருப்பண்ண சாமி படம் உடைப்பு அதிர்ச்சியில் ஐயப்பன் பக்தர்கள்!
குன்னூர்: ஐயப்பன் சிலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட சேலாஸ் பகுதியில், தற்போது கருப்பண்ண சாமியின் உருவ படம் உடைக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகேயுள்ள சேலாஸ் பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த இடத்தில் அம்மன் குடிவிடுதல், விசேஷ காலங்களில் அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். சமீபத்தில் ஐயப்பன் பூஜையின் போது கருப்பண்ண சாமி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பூஜை முடிந்த மறுநாள் வழிப்பாட்டுக்குரிய கருப்பண்ண சாமியின் உருவபடம் உடைந்து கிடந்ததை கண்ட ஐயப்பன பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் ஐயப்பன் ஐப்பொன் சிலையை மர்ம நபர்கள் கடத்த முயற்சி மேற்கொண்டு, அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிலையை வீசி சென்றனர். இந்த வழக்கில் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், கருப்பண்ணசாமி உருவ படம் உடைக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.