விருச்சிகம் : மாசி ராசி பலன்
விசாகம் 4 ம் பாதம்
துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நட்பு வட்டத்தால் ஆதாயம் ஏற்படும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்து வரும் சனி பகவான் மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்வதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் ஒரு தடை, நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் எதிர்பார்த்த பணமும் வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட ஆரம்பிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப்.26
அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 21, 27. மார்ச் 3, 9, 12
பரிகாரம்
மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
அனுஷம்
முயற்சிகளில் தடைகளை சந்தித்தாலும் அதைப் பாடமாக ஏற்கும் உங்களுக்கு, மாசி மாதம் நன்மையான மாதம். சகாய, சுக ஸ்தானாதிபதியான சனி பகவான் மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து உடல் நிலையில் பாதிப்பு, வேலைப்பளு, நெருக்கடியை ஏற்படுத்தினாலும், மார்ச் 6 முதல் கடந்த இரண்டரை ஆண்டாக உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பயம் போகும். ஆரோக்கியம் சீராகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் பிப்.21 வரை சகாய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் காரியம் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு இந்த மாதம் அதில் இருந்து விடுபடும் நிலை உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு குழப்பம் விலகி படிப்பில் கவனம் செல்லும்.
சந்திராஷ்டமம்: பிப். 26, 27
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18. மார்ச் 8, 9
பரிகாரம்
முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் விலகும்.
கேட்டை
துணிச்சலுடன் செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, மாசி மாதம் யோகமான மாதம். பிப். 20 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். ஜீவனாதிபதி சூரியன் கேந்திர பலம் பெறுவதால் அரசுவழி முயற்சிகள் லாபமாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பிப்.21 வரை ராசி நாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் மாதத்தின் தொடக்கத்திலேயே உங்கள் நிலையில் உயர்வு ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும். போராட்டம், நெருக்கடி, பிரச்னை என வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த பயம், குழப்பம் நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும்.
சந்திராஷ்டமம்: பிப்.27
அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 18, 23. மார்ச் 5, 9, 12
பரிகாரம் லட்சுமி நாராயணரை வழிபட வெற்றி கிடைக்கும்.