வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரில் தீ பக்தர்கள் அதிர்ச்சி
ADDED :24 minutes ago
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் பழைய தேர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. அப்போது, வானவேடிக்கை, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில், இருந்து தீப்பொறி கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய தேரின் கூரை மீது விழுந்தது. இதனால், கூரை மீது இருந்த கீற்று எரிந்து சேதமானது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். கும்பாபிேஷகம் நடந்து அன்றைய தினமே, பழைய தேர் தீப்பிடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.