உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருபுவனம் கோவில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி

திருபுவனம் கோவில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில், தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தருமசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.


இக்கோவிலில், 2007ல் நடந்த திருப்பணியின் போது, தேக்கு மரத்தால் ஆன கொடிமரத்தை அகற்றிவிட்டு, ‘ரோஸ் வுட்’ மரத்தாலான கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின், 2024ல் இக்கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, கொடிமரம் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், 51 அடி உயர கொடிமரம், நேற்று திடீரென சாய்ந்து, மகா மண்டபத்தில் தாங்கியபடி நின்றது. கொடிமரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சாய்ந்தது தெரியவந்தது. இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை என்றாலும், கொடிமரத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொடிமரத்தை மாற்ற ஏதுவாக, கலாகர்ஷண ஹோமம் செய்து, பாலாலயம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !