மகா கணபதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
ADDED :239 days ago
அவிநாசி; பழங்கரை இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி வட்டம்,பழங்கரை கிராமம், இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்திரா நகர் ஊர் மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.