உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லாங்கிணர் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

மல்லாங்கிணர் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி: மல்லாங்கிணர் செங்கமல தாயார், சென்ன கேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதையொட்டி கோ பூஜை, விஸ்வரூபம், த்வார தோரண பூஜை, மண்டல பூஜை, கும்ப ஆராதணம், தத்துவ ஹோமம், சதுர்ஸ்தான பூஜை, யாத்திரா தானம் நடைபெற்று, கடம் புறப்பாடு நடந்தது. மூலஸ்தான விமானங்கள், பரிவார விமானங்களுக்கு மகா சம்ப்ரோஷணம் நடந்தது. வேத திவ்ய பிரபந்த சாற்று முறை, தீபாராதனை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பெருமாள் கருட வாகனத்தில் ரதவீதி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !