உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா; 50 ஆயிரம் லட்டுகள் தயார்

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா; 50 ஆயிரம் லட்டுகள் தயார்

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவிற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டன.


விழுப்புரம், கைலாசநாதர் கோவிலில் இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா நாளை 15ம் தேதி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு 1008 சங்கு ஸ்தாபன பூஜையும், ஹோமங்களும், பகல் 12:00 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு முதல் கால பூஜையும், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, 16ம் தேதி காலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. சிவராத்திரி வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி, கைலாசநாதர் கோவில் வளாகத்தில் நேற்று காலை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், அறங்காவலர்கள் கலைச்செல்வி, ரவிச்சந்திரன், அர்ச்சகர் ரஞ்சித், செயல் அலுவலர் வேலரசு, பிரதோஷ பேரவையினர் ராமமூர்த்தி, சங்கரன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !