உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகத்தில் உள்ள திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுராந்தகத்தில் 1,000 ஆண்டுகளுக்கும் அதிக பழமையான, திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது.


ஹிந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலின் எதிரே, சரும தீர்த்த குளம் உள்ளது.


சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவில் குளத்து நீரால் சுத்தம் செய்தால் சரியாகும் என்பது, மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.


தற்போது இந்த குளம், பராமரிப்பு இல்லாமல், குளக்கரையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.


அத்துடன், அருகிலுள்ள வீடுகளின் குப்பைக் கழிவுகள், குளத்தின் அருகே கொட்டப்பட்டு வருகின்றன. குளத்து நீரும் மாசடைந்து, நிறம் மாறி வருகிறது.


எனவே, குளத்தைச் சுற்றி உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !