உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகத்துடன் கூடிய அம்மன் சிலை குடியாத்தத்தில் கண்டெடுப்பு

நாகத்துடன் கூடிய அம்மன் சிலை குடியாத்தத்தில் கண்டெடுப்பு

குடியாத்தம்: ஏரியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, 450 ஏக்கர் பரப்பளவில், நெல்லுார் பேட்டை ஏரி அமைந்துள்ளது. இங்கு, கரையின் ஓரம், ஐந்து தலை நாகத்துடன் கூடிய, இரண்டு அடி அம்மன் சிலை, நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.


இதையடுத்து, அங்கு குவிந்த மக்கள், அம்மன் சிலைக்கு மஞ்சள்நீரால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, வழிபட்டனர்.


சம்பவ இடத்திற்கு வந்த, குடியாத்தம் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர், அம்மன் சிலையை மீட்டு, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !