உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

 பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாஷேகம் நேற்று நடந்தது.


பண்ருட்டி அடுத்த திருவதிகையில் 1400 ஆண்டு கால பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை கும்ப ஆராதனைம், மகா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை பிரதான ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:40 மணிக்கு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் சேஷ வாகனத்தில் திருவிதியுலா நடந்தது. விழாவில் தொழிலதிபர்கள் அருள், சரவணன், ஜெ.கே.ஆர்.டெகஸ் ரமேஷ், ஆடிட்டர் தியாகராஜன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், குமாரசாமி கெமிக்கல் கார்த்திக், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ், தேவநாதன், சூர்யா ஜீவல்லர்ஸ் விஜய், உள்ளிட்ட ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !