உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி பஞ்சமி: மங்கள விநாயகர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பங்குனி பஞ்சமி: மங்கள விநாயகர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை: கோவை, ராம் நகர் சத்தியமூர்த்தி ரோடு,  சாஸ்திரி ரோடு சந்திப்பில் உள்ள ஸ்ரீ மங்கள விநாயகர் கோவிலில் பங்குனி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !