கிருஷ்ண பட்ச பஞ்சமி: உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :173 days ago
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி நடைபெற்றது.
உஜ்ஜைனில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஹாகாலேஷ்வர் கோயில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இங்கு சிவபெருமான் காலத்தின் கடவுளாக வழிபடப்படுகிறார், இத்தலத்தில் இன்று காலை கிருஷ்ண பட்ச பஞ்சமி திதியில், மகாகாலேஸ்வரருக்கு பஸ்ம ஆரத்தி வெகு சிறப்பாக நடைபெற்றது; தொடர்ந்து பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரச் சடங்குகள் மற்றும் மலர் அர்ச்சனைகளும் நிகழ்த்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.