விஜய ராகவ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை
ADDED :1 days ago
காஞ்சிபுரம்; திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், கருட சேவை உத்வம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோத்சவம் நடைபெறும். நடப்பு ஆண்டு பிரம்மோத்சவம் 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாவது நாள் உத்சவமான, காலை கருடசேவை உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. கருட வாகனத்தில், விஜயராகவப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய வீதிகள் வழியாக, கருட வாகனம் வீதியுலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.