உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஹா சிவராத்திரியில் குவிந்த பக்தர்கள்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஹா சிவராத்திரியில் குவிந்த பக்தர்கள்

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹாசிவராத்திரி திருவிழா நேற்று உற்சாகமாக துவங்கியது.

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரகம் கிடையாது மூடப்பட்ட கதைவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது பல ஆண்டுகளாக அணையாத நெய் விளக்கு எரிகின்றது.

நேற்று மாசி மஹாசிவராத்திரி திருவிழா துவங்கி பிப்., 22 வரை 8 நாட்கள் திருவிழா‌ நடக்கிறது. காலை 5:00 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வரிசையில் காத்திருந்தனர். காலை 6:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு மணி நேரமும் கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, தீச்சட்டி, கரும்பு தொட்டியில் குழந்தையை வைத்து கோயில் பிரகாரத்தை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு பஸ் இயக்கம்: பெரியகுளம், வத்தலகுண்டு,ஆண்டிபட்டியிலிருந்து காமாட்சியம்மன் கோயிலுக்கு நேற்று முதல் ஒவ்வொரு வழித்தடத்திலும் தலா 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனங்களால் மண் தூசி பறப்பதால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். 

கூடுதல் கட்டணம் வசூல்: கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு தலா ரூ.25 வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர். டி.எஸ்.பி., நல்லு, இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 9 இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள் மேற்பார்வையில் 170 போலீசார்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !