வெள்ளியங்கிரி மலையில் 16 நாட்களில் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ADDED :227 days ago
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு, கடந்த 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மலையேறுபவர்கள், பிளாஸ்டிக் மற்றும் போதை வஸ்துக்கள் கொண்டு செல்வதை தடுக்க, அடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை செய்த பின்பே மலையேற அனுமதித்து வருகின்றனர். இந்தாண்டு, துவக்கத்தில் இருந்தே, மலையேற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை 55 ஆயிரம் பேர் மலையேறி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.