உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மு.க.புதூர் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா

மு.க.புதூர் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா

சூலூர்; முத்துக் கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில், குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.


சூலூர் வட்டாரத்தில் உள்ள அரசூர் பரமசிவன் கோவில், சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், கருமத்தம்பட்டி சிவன் கோவில், செலம்பராயம்பாளையம் அழகீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன. இதேபோல், சிவராத்திரியை ஒட்டி, அங்காளம்மன் கோவில்களில் குண்டம் நடப்பது வழக்கம். முத்துக் கவுண்டன் புதூரில் உள்ள பழமையான அங்காளம்மன் கோவிலில், கடந்த, 8 ம் தேதி கணபதி ஹோமத்துடன் குண்டம் மற்றும் தேர் திருவிழா பூஜைகள் துவங்கின. தினமும் அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கி நேரத்திக்கடன் செலுத்தினர். இரவு நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுற்றுவட்டார கிர்மங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !