உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நந்தா தீப குண்டம் திருவிழா

அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நந்தா தீப குண்டம் திருவிழா

அவிநாசி: அவிநாசி நகராட்சி, காந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் 81வது நந்தா தீப குண்டம் திருவிழா, 13ம் தேதி அம்மன் சாட்டு விழாவுடன் துவங்கியது. நேற்று காலை அலகு நிறுத்துதல், குண்டம் திறப்பு ஆகியன நடந்தது. நேற்றிரவு சிறப்பு பூஜைகளுக்கு பின், குண்டத்திற்கு பூ வார்க்கப்பட்டது. விழாவில், இன்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனைத் தொடர்ந்து ரதா ரோகணம், இரவு ரிஷபவாகன காட்சியும், நாளை இரவு வேடுபறி, பரிவேட்டை, தெப்ப தேர், 19ம் தேதி கொடி இறக்கம் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 20ம் தேதி பேச்சியம்மன் அபிஷேக பூஜையும், 21ம் தேதி மகா அபிஷேகம், உற்சவம் பூர்த்தி அடைதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !