நெட்டப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
ADDED :13 hours ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதியம் 1:00 மணிக்கு மயானக் கொள்ளை விழாநடந்தது. இதில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தரிசனம் செய்தார். விழாவில், ஏரளமான பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய் மற்றும் கனிகள் உள்ளிட்ட பொருட்களை மயானத்தில் கொள்ளை விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.