உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் கோயிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியீடு!

பாபநாசம் கோயிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியீடு!

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் கோயிலுக்கு வாடகை மற்றும் நிலுவை பாக்கி வைத்திருப்போரின் பெயர்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாபநாசம் கோயிலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கட்டவேண்டிய வாடகை மற்றும் நிலுவை பாக்கி தொகை வைத்திருப்போர் பட்டியலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எட்டு பேர் ஊர்,பெயர் விவரம் குறிப்பிடப்பட்டு அவர்களிடமிருந்து வாடகை மற்றும் நிலுவை பாக்கியாக பாபநாசம் கோயிலுக்கு வரவேண்டிய தொகை 5 லட்சத்து 56 ஆயிரத்து 604 ரூபாய் என்று அறிவிப்பு போர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !