உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுந்துமாமலை கோயிலில் நாளை சிறப்பு பூஜை!

கொழுந்துமாமலை கோயிலில் நாளை சிறப்பு பூஜை!

திருநெல்வேலி: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இக் கோயில் சேரன்மகாதேவியில் இருந்து களக்காடு செல்லும் மெயின்ரோட்டின் மேல்புறம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. கோயிலில் மார்கழி மாத கடைசி வெள்ளி சிறப்பு பூஜை 11ம்தேதி நடக்கிறது. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு காலை 7.30 மணி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. சுற்று பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு வசதிக்காக சேரன்மகாதேவியில் இருந்து கோயிலுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !