ஆழ்வார்குறிச்சி கோயிலில் கும்ப பூஜை
ADDED :4687 days ago
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வரம் தரும் விநாயகர் கோயிலில் முருக பக்தர்கள் சார்பில் கும்ப பூஜை நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த சிறப்பு பூஜையில் காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. செல்லப்பாண்டியன் முன்னிலையில் அப்புநாத பட்ட கும்பபூஜை, வேதபாராயணம், சிறப்பு பூஜைகளை நடத்தினார். கோயில் அர்ச்சகர் ஆண்டபெருமாள்பிள்ளை சிறப்பு தீபாராதனை நடத்தினார். பின்னர் கும்பாபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. மாலை தீர்த்தக்கரை முருகன் கோயிலில் இருந்து முருக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காவடி ஆட்டத்துடன் வரம்தரும் விநாயகர் கோயில் வந்தடைந்தனர் பிறகு பஜனை, விசேஷ பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது.